Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅடுத்த ஆண்டும் அரச நிறுவனங்களுக்கு கொண்டாட்டங்கள் இல்லை

அடுத்த ஆண்டும் அரச நிறுவனங்களுக்கு கொண்டாட்டங்கள் இல்லை

பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அரச நிறுவனங்கள் செலவு செய்வதை நிறுத்தும் உத்தரவு அடுத்த ஆண்டு வரை அமலில் இருக்கும் என நிதி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான செலவினங்களை அங்கீகரிக்கும் மற்றும் பொதுச் செலவினங்களை நிர்வகித்தல் என்ற தலைப்பில் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, வருடாந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின் மூலம் ஒதுக்கப்படும் ஒதுக்கீடு வரம்புகள் அடுத்த வருடத்திற்கு மிகையாகாத வகையில் செலவுகளை நிர்வகிப்பது அதிகாரிகளின் பொறுப்பு என வலுவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles