பல்வேறு முறைகேடுகள் காரணமாக 384 நிறுவனங்களிடமிருந்து மருந்துக் கொள்வனவுகளை சுகாதார அமைச்சு இடைநிறுத்தியுள்ளது.
தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை, அரச மருந்து ஒழுங்குமுறை கூட்டுத்தாபனம் மற்றும் மருத்துவ வழங்கல் திணைக்களம் ஆகியவற்றின் பரிந்துரையின் பேரில், இந்நிறுவனங்களிடமிருந்து மருந்து கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த இடைநிறுத்தம் 2015ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை செய்யப்பட்டது.
மருந்துகளை இறக்குமதி செய்யும் போது பணம் செலுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் மருந்துகள் சரியான தரம் இல்லாததால் சுமார் 200 மருந்துகளின் சேவையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இடைநிறுத்தியுள்ளன.