Thursday, December 11, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன இறக்குமதி இடைநிறுத்தத்தால் பாரிய நஷ்டம்

வாகன இறக்குமதி இடைநிறுத்தத்தால் பாரிய நஷ்டம்

வாகன இறக்குமதியை இடைநிறுத்தியதன் மூலம் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பாரிய வருமானத்தை இழந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால் திணைக்களம் தனது வருமானத்தில் 50 வீதத்தை இழந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், இவ்வருடம் வாகனப் பரிமாற்றத்தின் மூலம் சுமார் 7 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வருடம் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் மிகக் குறைவானதாகவும், அவற்றில் பெரும்பாலான வாகனங்கள் அரசாங்க வாகனங்கள் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles