Monday, July 21, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணியாற்ற முடியாத செயலர்களை 6 மாதத்திற்குள் வீட்டுக்கு அனுப்ப திட்டம்

பணியாற்ற முடியாத செயலர்களை 6 மாதத்திற்குள் வீட்டுக்கு அனுப்ப திட்டம்

அரச நிர்வாக சேவையின் வினைத்திறனை பேணுவதற்கு அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் செயலாளர் அவரது பதவி காலத்தில் அமைச்சுக்களின் செயல்திறனை அதிகரிப்பதற்காக அடுத்த வருடத்திற்கான இலக்கை வழங்குவார்.

அத்துடன், செயலர்களுக்கான இலக்கு பின்பற்றப்படுகிறதா எனவும் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் முன்னேற்றம் குறித்து ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 மாதங்களில் தமது இலக்குகளை பூர்த்தி செய்யாத அமைச்சுச் செயலாளர்களை முன்னேற்றங்களைச் சரிபார்க்கும் போது அவர்களை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த வருடம் 60 வயதை பூர்த்தி செய்யவுள்ள அமைச்சுச் செயலாளர்களில் கணிசமானவர்கள் ஓய்வு பெறவுள்ள நிலையில்இ புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சுச் செயலாளர்களும் உடன்படிக்கையில் உள்வாங்கப்படவுள்ளனர்.

உடன்படிக்கையின்படி, அரச சேவைச் செலவினங்களை 25% குறைத்தல், தேவையற்ற செலவுகளைக் குறைத்தல் மற்றும் சுற்றறிக்கைகளின்படி முறையான நடவடிக்கைகள் முன்னெடுத்தல் போன்ற அரச சேவையின் செயல்திறன் தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.

#Asian Mirror

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles