ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக தற்போது சத்திரசிகிச்சை மற்றும் மருத்து சிகிச்சைக்காக வழங்கப்படும் நிதியுதவியை அதிகரிப்பதற்கு தேவையான பரிந்துரைகளை பெற்றுக் கொள்வதற்கு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குழுவின் பரிந்துரைகள் வழங்கப்பட்டவுடன் வழங்கப்படும் மருத்துவ உதவித் தொகையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, 2023 ஆம் ஆண்டின் சில மாதங்களில், மருத்துவ உதவியாக வழங்கப்படும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளன.
எந்தெந்த நோய்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்படும் என்பதைத் தவிர, மேலும் மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டிய நிபந்தனைகள் தொடர்பில் தேவையான பரிந்துரைகளை வழங்க குழு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.