Monday, May 26, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரசின் தீர்மானங்களால் பொருளாதாரம் மீட்சியடைகிறது – ஷெஹான் சேமசிங்க

அரசின் தீர்மானங்களால் பொருளாதாரம் மீட்சியடைகிறது – ஷெஹான் சேமசிங்க

அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களினால் பொருளாதாரம் படிப்படியாக ஸ்திரத்தன்மையை அடைந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட சவாலான தீர்மானங்களால் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை நோக்கிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பணவீக்கம் குறைந்திருப்பது பொருளாதாரம் சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதற்கான அறிகுறியாகும்.

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பிணை எடுப்புப் பொதியைப் பெறுவதற்கு அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கம் ஏற்கனவே IMF உடன் பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இப்போது இருதரப்பு கடன் வழங்குபவர்கள் நிதி உத்தரவாதத்தை வழங்குவதற்காக காத்திருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles