Wednesday, July 23, 2025
27.2 C
Colombo
செய்திகள்உலகம்நரேந்திர மோடியின் தாயார் காலமானார்

நரேந்திர மோடியின் தாயார் காலமானார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென், தமது 99 ஆவது வயதில் காலமானார்.

வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மேத்தா இதய சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவர் கடந்த 28 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக பிரதமர் மோடி மருத்துவமனைக்கு சென்று தனது தாயார் ஹீராபெனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் இன்று அதிகாலை 3.30க்கு அவர் காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமது தாயார் காலமானதாக பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles