Wednesday, July 23, 2025
27.2 C
Colombo
செய்திகள்உலகம்சர்ச்சைக்குரிய பிரபலமான ஆண்ட்ரூ டெட் கைது

சர்ச்சைக்குரிய பிரபலமான ஆண்ட்ரூ டெட் கைது

சர்ச்சைக்குரிய சமூக வலைத்தள பிரபலமான ஆண்ட்ரூ டெட் ருமேனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

19 வயதான காலநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் உடனான ட்விட்டர் கருத்து பரிமாறல் நிகழ்ந்து 24 மணி நேரத்திற்குள் ஆண்ட்ரூ டெட் கைதாகியுள்ளார்.

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தல், மனித கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்காக ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் டிரிஸ்டன் ஆகியோ கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ட்விட்டரில் வெளியிடப்பட்ட பீட்சா ரேப்பரின் புகைப்படத்தில் இருந்து ஆண்ட்ரூ டெட் மற்றும் கிரேட்டா துன்பெர்க் ஆகியோரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடிந்ததாக ருமேனிய பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் மற்றும் அவரது சகோதரர் மீது சுமார் ஆறு பெண்கள் உட்பட பலர் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles