ஜனவரி முதலாம் திகதி முதல் இந்தியாவுக்குள் பிரவேசிக்கும் 5 நாடுகளை சேர்ந்தவர்களை கொவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சீனா, ஹொங்கொங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்திய சுகாதாரத்துறை இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.