உணவு திணைக்களத்தின் கிடங்குகளில் 100,000 மெட்ரிக் டன் அரிசி இருப்பு வைக்க கடந்த ஆண்டு 20 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் அதனை பயன்படுத்தாமல் திரும்ப அனுப்பியுள்ளதாக தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நாட்டின் உணவுப் பாதுகாப்பு தொடர்பான பாரதூரமான பிரச்சினை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை அரிசி இருப்பு வைக்கப்படவில்லை என்றும், இருப்புப் பராமரிக்க வழங்கப்பட்ட பணம் பின்னர் அரச வணிக சட்டப்பூர்வ நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.