Sunday, May 25, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு5,000 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

5,000 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என உப பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.

இதன் போது 5,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போதை மாத்திரைகள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தி விற்பனை செய்யப்பட்டு வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக ஆறுகால் மடம் பகுதியை மையமாக வைத்து இந்த போதைப் பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles