Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸஹ்ரானுடன் தொடர்பை பேணிய ஒருவர் தமிழகத்தில் கைது

ஸஹ்ரானுடன் தொடர்பை பேணிய ஒருவர் தமிழகத்தில் கைது

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சந்தேகநபரான ஸஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்த ஒருவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை இந்திய தேசிய புலனாய்வு முகமையினர் நேற்று (28) கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி இந்தியாவின் கோயம்புத்தூரில் காரை வெடி வைத்து தகர்த்திய சம்பவத்துடன் ஐ.எஸ் அமைப்புடன் குறித்த சந்தேகநபருக்கு நேரடித் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சந்தேக நபருடன் தொடர்பு கொண்டிருந்த ஐ.எஸ் உறுப்பினர் ஒருவரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேற்படி சந்தேக நபரும், ‘சனோபர் அலி’ என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சந்தேகநபரான ஸஹ்ரான் ஹாசிமுடன் இவர்கள் நேரடித் தொடர்பு வைத்திருந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles