மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சுமார் இரண்டு வருடங்களின் பின்னர் இன்று (29) முதல் சர்வதேச சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்ட மத்தள ராஜபக்ஷ விமான நிலையம் கடந்த காலங்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்று விமான நிலையமாக பயன்படுத்தப்பட்டது.
நாட்டின் வான்வெளிக்கு மேலே பறக்கும் விமானங்கள் அவசரமாக தரையிறங்குவதற்கான விமான நிலையமாகவும் இது பயன்படுத்தப்பட்டது.
‘ரெட் விங்ஸ்’ விமான சேவைக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று காலை ரஷ்யாவில் இருந்து மத்தள விமான நிலையத்தை வந்தடைய உள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.