Tuesday, July 22, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டுக்குள் அத்துமீறி பிரவேசித்த 4 தமிழக மீனவர்களை திருப்பியனுப்ப நடவடிக்கை

நாட்டுக்குள் அத்துமீறி பிரவேசித்த 4 தமிழக மீனவர்களை திருப்பியனுப்ப நடவடிக்கை

ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்த தமிழக மீனவர்கள் 4 பேரை மீள தமிழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீன் பிடித்துக் கொண்டிருந்த குறித்த மீனவர்களின் வலைகளை இலங்கை மீனவர்கள் அறுத்து எடுத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் அதனை மீட்பதற்காக அவர்கள் இலங்கை மீனவர்களை பின்தொடர்ந்து வந்த போது படகு பழுதடைந்த நிலையில் வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்தனர்.

தஞ்சமடைந்த மீனவர்களை மீட்ட ஆதிகோவிலடி மக்கள் அவர்களுக்கு உணவு வழங்கியதுடன், அவர்களை வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனா்.

இந்நிலையில் தஞ்சமடைந்த மீனவர்களை உடனடியாக தமிழகத்திற்கு திருப்பி அனுப்ப பொலிஸாருடன் இணைந்து யாழ். இந்திய துணை தூதரகமும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles