இலங்கையில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும், இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியானது சமூகத்தின் அனைத்துத் துறைகளையும் பாதிப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் 5.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக தெரியவந்துள்ளது.
ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 85% பேர் இந்த நிலைக்குத் தகவமைத்துள்ளனர் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் சனத்தொகையில் 4.9 மில்லியன் மக்கள் அதாவது 22% சமூகத்தினர் உணவுப் பற்றாக்குறையால் அவதியுறுவதுடன், 05 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஊட்டச் சத்து குறைபாடுள்ள நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.