Saturday, November 16, 2024
23 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனவரி இறுதி வாரம் கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனம்

ஜனவரி இறுதி வாரம் கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனம்

அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்திற் கொண்டு அதிக வரிகளை அறவிட அரசாங்கம் தீர்மானித்ததன் காரணமாக தொழில் வல்லுநர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் 20,000 வைத்தியர்களிடம் கையெழுத்து சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி ஜனவரி 10ஆம் திகதி கையொப்பமிடப்பட்ட மனு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles