உலகளாவிய அறிவு சுட்டெண்ணில் (Global Knowledge Index) இலங்கை 79 வது இடத்தைப் பெற்றுள்ளது.
அறிவுக் சுட்டெண் என்பது, கல்வி, புத்தாக்கம், அறிவு, பொருளாதாரம், தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற துறைகளின் அடிப்படையில் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவு அறக்கட்டளை மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை இணைந்து உலக நாடுகளின் அடிப்படையில் பெறும் மதிப்பீடு ஆகும்.
இந்தச் சுட்டெண்ணில் 79ஆவது இடத்தைப் பெற்றுள்ள இலங்கைக்கு 43.4 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலில் அமெரிக்கா 68.37 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சுவிட்சர்லாந்து 68.28 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், ஸ்வீடன் 66.96 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
இந்த குறியீட்டில் இந்தியா 91வது இடத்தில் உள்ளதுடன், அது 41.52 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
#Lankadeepa