மணி மற்றும் ஒளி சமிக்ஞைகளுடன் கூடிய சுமார் 60 ரயில் கடவைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக ரயில்வே சிக்னலிங் உப திணைக்களத்தின் பிரதான பொறியியலாளர் சிந்தக ஜயசேகர தெரிவித்தார்.
430 மணி மற்றும் ஒளி சமிக்ஞைகள் உள்ளன. ஆனால் சுமார் 60 சமிக்ஞை இயந்திரங்கள் பழுதடைந்து உள்ளதாக தலைமை பொறியாளர் கூறினார்.
கரையோர வீதிகள் மற்றும் புத்தளம் வீதியில் அதிகளவான கடவைகளில் இந்த ஆபத்தான நிலை காணப்படுவதாகவும், நடைமுறை சமிக்ஞைகளை பயன்படுத்தி ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த பழுதடைந்த சிக்னல்களை புனரமைக்கும் பணிகளும், சிக்னல் அமைப்பை நவீனப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், புகையிரதப் பாதைகள் உட்பட புகையிரத வீதிகளில் சிக்னல் கேபிள்களை போதைப்பொருள் வியாபாரிகள் துண்டிப்பதாலேயே சிக்னல் கோளாறுகள் ஏற்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் விசேட கவனம் செலுத்தி நாசகாரர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.