Friday, May 23, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமலிவு விலையில் முட்டைகளை வாங்கினார் மஹிந்த அமரவீர

மலிவு விலையில் முட்டைகளை வாங்கினார் மஹிந்த அமரவீர

55 ரூபாவிற்கு முட்டைகளை விற்பனை செய்யும் வேலைத்திட்டம் கொழும்பு மற்றும் கம்பஹாவில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பத்தரமுல்லையில் மலிவான முட்டைப் பொதி ஒன்றை கொள்வனவு செய்தார்.

55 ரூபா விலையில் நுகர்வோருக்கு முட்டை விற்பனையை ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

அதன்படி, கொழும்பு மற்றும் கம்பஹாவின் பல பகுதிகளில் முட்டை விற்பனை செய்யும் பணிகள் இன்று (28) ஆரம்பமாகின.

10 லொறிகளில் 10 இடங்களில் 04 இலட்சம் முட்டைகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இம்மாதம் 30ஆம் திகதி காலி மற்றும் கண்டி நகரப் பகுதிகளில் முட்டை விற்பனை செய்யப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles