Tuesday, November 19, 2024
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமக்களுக்கு விதிக்கப்படும் வரியை அதிகரித்து சில துறைகளுக்கு வரிச்சலுகை

மக்களுக்கு விதிக்கப்படும் வரியை அதிகரித்து சில துறைகளுக்கு வரிச்சலுகை

மக்களிடம் வசூலிக்கும் வரியை அதிகரித்து சில துறைகளுக்கு அரசு வரிச்சலுகை அளித்துள்ளதாக வெரிட்டி ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

12 ஆண்டுகளுக்கும் மேலாக வரி செலுத்துவதைத் தவிர்க்க சில நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர், பொருளாதார நிபுணர் கலாநிதி நிஷாந்த த மெல் தெரிவித்தார்.

வரி வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தற்போதுள்ள பலவீனங்கள் மற்றும் ஊழல்கள் காரணமாக அரசாங்கத்தால் முறையாக வரிகளை வசூலிக்க முடியவில்லை என பொருளாதார நிபுணரான வெரிட்டி ரிசர்ச்சின் பணிப்பாளர் கலாநிதி நிஷான் த மெல் மேலும் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles