கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்கள், வயோதிபர்கள் மற்றும் பிற குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட கைதிகளை விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சுகாதார பணிப்பாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் சுதந்திர தினத்திற்குள் ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் இவ்வாறான கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
சிறைச்சாலை அமைப்பில் உள்ள நெரிசல், கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களை நல்ல குடிமக்களாக சமூகமயமாக்கும் சவாலை கருத்தில் கொண்டு சிறைச்சாலை மறுசீரமைப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சிறை அமைப்பில் 10,200 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். 16,000 க்கும் அதிகமானோர் சிறு குற்றங்கள் மற்றும் பல்வேறு குற்றங்களுக்காக தடுப்புக் கைதிகளாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பத்தரமுல்லை தியத உயன வளாகத்தில் நேற்று (27) நடைபெற்ற கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
#Dinamina