இலங்கைக்கு நிலக்கரி வழங்குவதற்கு இந்தோனேசிய நிறுவனமொன்றுக்கு டெண்டர் வழங்கப்பட்டதாக லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர குறிப்பிடுகின்றார்.
அதன்படி, 7,20,000 மெற்றிக் டன் நிலக்கரியை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதாக நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் நிலக்கரி விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கு நிலக்கரி வழங்குவதற்கான விலைகளை 09 விநியோகஸ்தர்கள் சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இலங்கைக்கு கடன் காலம் ஒன்றுக்கு குறைந்த விலையில் வழங்கிய நிறுவனத்திற்கே விநியோக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.