அரசாங்கத்தின் மாதாந்த வருமானம் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சுபீட்ச கொடுப்பனவுகளை வழங்குவதற்கு மட்டுமே போதுமானது என்ற பின்னணியில் தேர்தல் நடத்தப்பட்டால், பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையும் என நிதியமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போதைய நிதி நெருக்கடியை தீர்க்க முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிதியமைச்சக அதிகாரி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வெற்றிகரமான முடிவுகளைப் பெற முடியும் என கூறினார்.
இவ்வாறானதொரு பின்னணியில் தேர்தலுக்கு பணம் ஒதுக்க முடியாது எனவும், அவ்வாறு பணம் ஒதுக்கினால் பொருளாதாரம் மோசமடைந்து மீட்சியடைய முடியாமல் போகும் என அவர் தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக மாதாந்தம் 93,000 மில்லியன் ரூபாவும், ஓய்வூதியத்திற்காக 26,500 மில்லியன் ரூபாவும், சுபீட்ச கொடுப்பனவுகளுக்காக 6,000 மில்லியன் ரூபாவும், சமூக நலன்களுக்காக 3,500 மில்லியன் ரூபாவும், மருந்துப் பொருட்களுக்காக 3,500 மில்லியன் ரூபாவும் ஒதுக்குவதற்கு மட்டுமே அரசாங்க வருமானம் போதுமானது என்று கூறப்படுகிறது.
#Lankadeepa