Tuesday, November 19, 2024
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிளிநொச்சி புதிய பேருந்து நிலையம் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும்

கிளிநொச்சி புதிய பேருந்து நிலையம் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும்

நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி புதிய பேருந்து நிலையம் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்தப் பேருந்து நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை 94 மில்லியன் ரூபா ஆகும்.

2016 – 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனம் இதன் ஒருபகுதியில் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டது.

பின்னர், நகர அபிவிருத்தி அதிகாரசபை இங்கு 2020 இல் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து 2022 மே மாதம் நிறைவு செய்தது. வடக்கு மாகாண சபைக்குச் சொந்தமான காணியில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி புதிய பேருந்து நிலையத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை மக்களிடம் கையளிக்கப்படவில்லை என அண்மையில் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பில் தெரியவந்துள்ளது.

அங்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த புதிய பேருந்து நிலையத்தை மக்களிடம் கையளிக்க உடனடியாக ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles