Sunday, May 25, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரஷ்யாவிலிருந்து மற்றுமொரு விமான சேவை

ரஷ்யாவிலிருந்து மற்றுமொரு விமான சேவை

ரஷ்யாவின் ”ரெட் விங்ஸ்”(Red Wings) விமான சேவை நிறுவனத்தின் இலங்கைக்கான விமான சேவை நாளை மறுதினம்(29) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

ரெட் விங்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தினூடாக 404 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச குறிப்பிட்டார்.

அசூர் மற்றும் ஏரோப்ளோட் விமான நிறுவனங்கள் ஏற்கனவே ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பித்துள்ளன.

ரெட் விங்ஸ் மூலம் இலங்கைக்கான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ரஷ்யா – இலங்கை இடையில் 03 நேரடி விமான சேவைகள் முன்னெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.ரஷ்யாவிலிருந்து மற்றுமொரு விமான சேவை

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles