Friday, February 13, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தலை நடத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - தேர்தல் ஆணையாளர் நாயகம்

தேர்தலை நடத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – தேர்தல் ஆணையாளர் நாயகம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா தேர்தல் ஆணையாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று (27) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் திகதி இவ்வருடத்தின் இறுதி வாரத்தில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டு தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபா கோரப்பட்டதாகக் குறிப்பிட்ட தேர்தல் ஆணையாளர், அந்தக் கோரிக்கையின் பிரகாரம் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles