Saturday, November 16, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதினேஷ் ஷாஃப்டரின் மரண விசாரணையில் புதிய திருப்பம்

தினேஷ் ஷாஃப்டரின் மரண விசாரணையில் புதிய திருப்பம்

தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பாக கிடைத்து வரும் தகவல்கள் மற்றும் சில ஆதாரங்களால் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஷாஃப்டரின் மரணத்தின் போது கழுத்தில் கட்டப்பட்ட கம்பியைப் போன்ற ஒரு கம்பியை அவரது வீட்டில் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். மேலும், ஷாஃப்டரின் கைகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருந்த சில கேபிள் இணைப்புகள் அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

இதேவேளை ஷாஃப்டர் தற்கொலை செய்து கொண்டாரா என்றும் விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்இ ஆனால் ஷாஃப்டரின் மரணம் குறித்த பிரேத பரிசோதனையின் படி, வயர் கேபிளால் கழுத்தை நெரித்ததால் மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது .

இதற்கிடையில், சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ஷாஃப்ட்டர் தனது மாமியாருக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதங்கள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர். மேலும் அதில் உணர்ச்சிகரமான கருத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது.

‘இவ்வளவு நல்ல மகளை வளர்த்ததற்கு மிக்க நன்றி’ என்று அவர் மாமியாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

மேலும், ஷாஃப்டர் தான் வசித்து வந்த ப்ளவர் வீதியில் உள்ள தனது வீட்டை விற்பதற்காக நாளிதழ் ஒன்றில் விளம்பரம் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் ஷாஃப்டர் பல்வேறு வணிக முயற்சிகளில் மில்லியன் கணக்கான ரூபாக்களை முதலீடு செய்த பின்னர் பணத்தை திரும்பப் பெறத் தவறியதால் பல இழப்புகளைச் சந்தித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது கொலையா அல்லது தற்கொலையா என்பதை விசாரணைகள் முடிவு செய்யவில்லை எனவும்இ சம்பவம் தொடர்பாக ஒவ்வொரு கோணத்திலும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் .

மேலும், பொலிசார் இதுவரை 70க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தினேஷ் ஷாஃப்டரின் மனைவி, இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி ஆகியோர் விசாரிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles