Sunday, July 27, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியக் கடனின் கீழ் தேர்தலுக்கான மை கொள்வனவு?

இந்தியக் கடனின் கீழ் தேர்தலுக்கான மை கொள்வனவு?

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா வழங்கும் கடன் வசதியின் கீழ், உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான விரல் பூச்சு (மை) இறக்குமதி செய்வது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், அதற்கு முன்னர் தற்போது ஆணைக்குழு வசம் உள்ள மை காலாவதியாகிவிட்டதா என பரிசோதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏற்கனவே அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் அறிக்கை கோரியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவாவிடம் வினவியபோது, தற்போதுள்ள மை கையிருப்பு தேர்தலை நடத்த போதுமானதாக இல்லாததால், கட்டாயமாக இறக்குமதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும், விரல் பூச்சு இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் தற்போதைய எல்லை நிர்ணய குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles