Saturday, February 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு

யாழில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்துார் – வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (22) மாலை ஆடு மேய்ப்பதற்காக சென்றிருந்த வாதரவத்தை – பெரிய பொக்கணை பகுதியை சேர்ந்த செ.ராகுலன் (வயது 25) என்ற இளைஞன் இன்று (23) காலை ஆகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் இளைஞனின் தந்தை அவரை தேடிச் சென்றிருந்தபோது நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் வலிப்பு காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles