Saturday, April 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுமிக்கு மது அருந்த கொடுத்து பாலியல் வன்புணர்ந்த இளைஞன் கைது

சிறுமிக்கு மது அருந்த கொடுத்து பாலியல் வன்புணர்ந்த இளைஞன் கைது

ரக்வான பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று அவரை மது அருந்த செய்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ரக்வான பொலிஸ் பிரிவை சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

சந்தேக நபர் சிறுமியை வன்புணர்வு செய்த பின்னர், அவனது இரண்டு நண்பர்களும் அதே நேரத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக அப்பகுதியின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இருவரை கைது செய்ய ரக்வான பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய சந்தேக நபருடன் மாணவி காதல் வயப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவளது காதலன் என கூறப்படும் சந்தேக நபர், முதலில் சிறுமியை மது அருந்த வற்புறுத்திய பின்னர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் அவனது இரண்டு நண்பர்களும் அவளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles