அமெரிக்காவின் பல பகுதிகளில் கடுமையான பனி புயல்கள் ஏற்படும் என சுமார் 100 மில்லியன் மக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை இதுவாகும்.
மேலும் சூறாவளி காரணமாக அமெரிக்காவின் சில பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 55 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பல நகரங்களில் அவசரகால நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.