Tuesday, July 15, 2025
27.8 C
Colombo
செய்திகள்உலகம்வீம்புக்கு கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட சீன பாடகி

வீம்புக்கு கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட சீன பாடகி

தான் வேண்டுமென்றே கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டதாக பிரபல சீன பாடகி ஜேன் ஜெங் தெரிவித்துள்ளார்.

இதனை அவர் தனது சமூக ஊடக கணக்கில் தெரிவித்ததுடன், அது தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

அவர் தெரிவித்ததாவது,

தனது நண்பர்கள் குழு கொவிட் நோயால் பாதிக்கப்பட்டிப்பதை அறிந்தே சந்திக்கச் சென்றதhகவும், அதனால் தானும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டதாக கூறினார்.

தற்போதுஇ ​​சீனாவில் கொவிட் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. நாளாந்தம் சுமார் 40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த இசை நிகழ்ச்சியின் போது தான் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டால், அது நிகழ்ச்சிக்கு இடையூறாக இருக்கும் என்றும், அதனாலேயே தான் முன்கூட்டி கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், இசைநிகழ்ச்சிக்கு முன் தான் குணமடைய முடியும் என அவர் விளக்கமளித்துள்ளார்.

#Reuters

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles