Saturday, November 16, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமியன்மார் அகதிகள் மிரிஹானை தடுப்பு முகாமுக்கு

மியன்மார் அகதிகள் மிரிஹானை தடுப்பு முகாமுக்கு

கடந்த வாரம் வெற்றிலைக்கேணியை அண்மித்த கடற்பரப்பில் வைத்து கடற்படையால் அழைத்து வரப்பட்ட மியன்மார் அகதிகள் இன்று (22) யாழ். சிறைச்சாலையில் இருந்து நீர்கொழும்புக்கு புறப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் மாலை வேளையில் மீரிஹானை தடுப்பு முகாமை சென்றடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்களாதேஷில் இருந்து இந்தோனேசியா நோக்கி செல்ல தயாராக இருந்த நிலையில் படகு பழுதடைந்து கடலில் தத்தளித்த நிலையில் இலங்கை கடற்படையினரால் சுமார் 105 பேர் காப்பாற்றப்பட்டனர்.

இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களுக்கு காங்கேசன்துறை துறைமுகத்தில் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களுக்கான உணவு மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டது.

அதில் இரு குடும்பங்களை சேர்ந்தவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்

இந்நிலையில் பொலிசார் கடந்த திங்கட்கிழமை இரவு உரிய ஏற்பாடுகள் இன்றி இரு பேருந்துகளில் அகதிகளை நீர் கொழும்புக்கு அனுப்பி வைக்க தயாராக இருந்த நிலையில் உயர் மட்டத் தலையீட்டால் யாழ். சிறைச்சாலையில் அவர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இவ்வாறான நிலையில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயவின் நேரடி கண்காணிப்பில் வட மாகாண அமைச்சுகளின் மூன்று பேருந்துகள் மூலம் குறித்த அகதிகள் இட நெருக்கடி இன்றி பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

அத்தோடு அவர்களுக்கு ஏதேனும் மருத்துவ ரீதியிலான பிரச்சனைகள் ஏற்பட்டால் உதவி வழங்குவதற்காக ஒரு ஆம்புலன்ஸ் வண்டியும் கூடவே பயணித்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles