நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஹிடேகி மிசுகோஷிக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் நல்லிணக்க செயல்முறை மற்றும் நீதித்துறையில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் மேம்பாட்டு பணிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அறிவுப் பகிர்வு மற்றும் சட்ட அமைப்பில் தொழில்நுட்ப சீர்திருத்தங்களுக்கு உதவுவதில் இலங்கைக்கு ஆதரவளிக்க ஜப்பான் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக தூதுவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜப்பான் அரசாங்கம் வழங்கிய ஆதரவைப் பாராட்டிய அமைச்சர், பல ஆண்டுகளாக ஜப்பானின் நட்புறவுக்கு நன்றி தெரிவித்தார்.