Friday, November 15, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபா உள்ளது - தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபா உள்ளது – தேர்தல்கள் ஆணைக்குழு

2023 ஆம் ஆண்டு தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் 10 பில்லியன் ரூபா உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தேர்தலை நடத்துவதற்காக மொத்தமாக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே வரவு -செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தினால் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அது ehlhளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தலை நடத்துவதற்கு அவர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் எனவும், பொதுமக்களின் கருத்துக்கு அடிபணிய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles