ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், வெளிநாட்டு வர்த்தகத் துறையிலிருந்து தேசிய பொருளாதாரத்திற்கு அதிகபட்ச உற்பத்தியைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
தற்போதுள்ள பாரம்பரிய நிறுவனங்களை மறுசீரமைத்து, அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் புதிய சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2023 பாதீட்டு உரையில் அறிவிக்கப்பட்டதன்படி, சர்வதேச வர்த்தக அலுவலகம் முதலில் நிதி அமைச்சின் கீழ் நிறுவப்பட்டு பின்னர் வெளிவிவகார அமைச்சுடன் இணைக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் வெளிநாட்டு வர்த்தக அபிவிருத்திக் கொள்கையை மேம்படுத்தி, பயனுள்ள ஒருங்கிணைப்புடன் அதனை உலகளவில் நடைமுறைப்படுத்துவதற்கு இந்த அலுவலகம் நிறுவப்படவுள்ளது.