Wednesday, May 21, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிமானப் பணிப்பெண் வேலையை வாங்கி தருவதாக கூறி பெண்களை ஏமாற்றியவர் கைது

விமானப் பணிப்பெண் வேலையை வாங்கி தருவதாக கூறி பெண்களை ஏமாற்றியவர் கைது

விமானப் பணிப்பெண்களை நியமிக்கும் நிறுவனம் என்ற போர்வையில் இணையத்தில் நேர்காணல் நடத்தி அழகான யுவதிகளின் நிர்வாண புகைப்படங்களை பெற்றுக்கொண்டு பாலியல் லஞ்சம் பெற முயன்ற நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஹகுரன்கெத்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்கி ரந்தெனியவிடம் சம்பவத்திற்கு முகங்கொடுத்த மாத்தளை மற்றும் கண்டியில் வசிக்கும் இரண்டு யுவதிகள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் நான்கு கையடக்கத் தொலைபேசிகளும், 13 சிம் அட்டைகளும் கணினி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

20க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களும் கணினியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் தன்னை பெண் போல காண்பித்து சந்தேக நபர், இளம் பெண்களுக்கு அழகு ஆலோசனை, வேலை வாய்ப்பு, நடிப்பு வாய்ப்பு வழங்குவதாக கூறி இரண்டு ஆண்டுகளாக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles