உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை சந்தித்துள்ளார்.
ரிஷாட் பதியுதீன் தனது கட்சியின் பிரதிநிதித்துவங்கள் அடங்கிய ஆவணத்தை கையளித்திருத்தார்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தேர்தல் முறைமையில் முறைகேடுகள் இடம்பெற்றதாகவும், இதனால் பாரிய பிரச்சினை ஏற்பட்டதாகவும் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டால் பல்வேறு சமூக, இனப்பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பது கடினமாகும் எனவும், இதன் காரணமாக பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, பழைய விகிதாச்சார முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்றும், அவ்வாறு நடத்தினால், உறுப்பினர் எண்ணிக்கையில் எதிர்பார்க்கப்படும் குறைப்பை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.