Thursday, May 22, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீண்ட நேர மின்வெட்டு அமுலாகும் சாத்தியம்

நீண்ட நேர மின்வெட்டு அமுலாகும் சாத்தியம்

உரிய நேரத்தில் நிலக்கரியை கொண்டுவர அரசாங்கம் தவறும் பட்சத்தில், விரைவில் நீண்ட நேரம் மின்வெட்டு அமுலாக்கப்பட வேண்டியேற்படும் என்று இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 3 மாதங்களில் 5 நிலக்கரி கப்பல்களை மாத்திரமே இலங்கைக்கு கொண்டுவர முடிந்தது.

ஜனவரி 15ம் திகதிக்கு முன்னர் குறைந்த எண்ணிக்கையிலான நிலக்கரி கப்பல்களை மாத்திரமே கொண்டுவர முடியும் என்ற நிலைமை இருக்கிறது.

தற்போது நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் ஒரு இயந்திரத்தின் பணிகளை இடைநிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உரிய நேரத்துக்குள் நிலக்கரி கொண்டுவரப்படாவிட்டால், நாளாந்தம் 8-10 மணி நேர மின்வெட்டினை தவிர்க்க முடியாது போகலாம் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles