Saturday, May 17, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகழிப்பறைக்குள் கஞ்சா பயன்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

கழிப்பறைக்குள் கஞ்சா பயன்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

பொலிஸ் நிலைய மலசலகூடத்தில் கஞ்சா பயன்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட அதிகாரி உடனடியாக உயர் அதிகாரிகளால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகரின் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியவர் ஆவார்.

நேற்று (19) கழிவறைக்குள் ‘கஞ்சா’ புகைத்த போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகவும், அவரது பையை சோதனையிட்ட போது சிறிய கஞ்சா பொதியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles