பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இரண்டு பெண்களுடனான பாலியல் உரையாடல் அடங்கிய குரல்பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இருப்பினும், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த குரல் பதிவுகள் குறித்து இம்ரான் கான் தரப்பில் பதிலளித்துள்ளது.
குறித்த குரல் பதிவுகள் போலியானவை என்றும், முன்னாள் பிரதமரின் மரியாதையை கெடுக்கும் மற்றொரு முயற்சி என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த குரல் பதிவுகள் பத்திரிகையாளர் சையத் அலி ஹைதர் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றினார்.
அவற்றின் சிலவற்றில் முஷாரஃப் பற்றிய உரையாடல் இருப்பதால், அவை 2008-09 ஆம் ஆண்டிற்கு முந்தையவை என கருதப்படுகிறது.
மற்றைய குரல் பதிவு சமீபத்தியது என்று நம்பப்படுகிறது.
மேலும் பெயரிடப்படாத பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் உள்ள வலி தொடர்பில் அப்பதிவுகளில் பேசப்ப்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், இம்ரான் கான் தனது குடும்பத்தினரும் குழந்தைகளும் வருவதாக குறித்த பதிவுகளின் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் அரட்டை குரல் பதிவுகள் சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதனால் அவரது இஸ்லாமிய விழுமியங்களை பலர் கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர்.
எவ்வாறாயினும், பல சமூக ஊடக பயனர்கள், இந்த குரல் பதிவு முற்றிலும் போலியானது என்றும் பல செயலிகளால் அத்தகைய குரல்களை உருவாக்க முடியும் என்று கூறுகின்றனர்.
#HindustanTimes