Tuesday, July 8, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு10 மணி நேர மின்வெட்டு அமுலாகலாம்

10 மணி நேர மின்வெட்டு அமுலாகலாம்

நாட்டின் நிலக்கரி இருப்பு இம்மாதம் தீர்வடைந்த பின்னர், நுரைச்சோலை ‘லக்விஜய’ அனல்மின் நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்படும் எனவும், அதனால் நாட்டில் 10 மணி நேர மின்வெட்டு அமுலாகும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார் .

நாட்டின் மின்சார விநியோகத்தில் 45 வீதமான மின்சாரத்தை நுரைச்சோலை அனல்மின் நிலையம் வழங்குகிறது.

இங்கு மூன்று இயந்திரங்களும் செயலிழந்தால் 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படும்.

அதேவேளை நீர்மின் நிலையங்களில் நீர்மட்டம் 75 வீதமாக குறைந்துள்ளதால்இ அடுத்த சில மாதங்களில் நீர்மின்சாரம் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டுமா என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் நாடு இயங்க முடியாத நிலை ஏற்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார் .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles