வௌிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் ஒத்துழைப்புகளை நாட்டிற்கு பெற்றுக்கொள்வதற்கான மத்திய ஒருங்கிணைப்பு அலுவலகமொன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2022 இடைக்கால வரவு செலவுத்திட்ட யோசனைக்கு அமைய இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வௌிநாடுகளில் வாழும் 3 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் ஒத்துழைப்புகளை நாட்டின் அபிவிருத்திக்காக பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் வகையில் இந்த புதிய அலுவலகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.