Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணவீக்க சுட்டெண்ணில் தரமிறங்கிய இலங்கை

பணவீக்க சுட்டெண்ணில் தரமிறங்கிய இலங்கை

உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் உலக வங்கியின் சுட்டெண்ணில் இலங்கை ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளது.

சுட்டெண்ணின்படி இலங்கையின் உணவுப் பணவீக்கம் 74 சதவீதமாக உள்ளது.

கடந்த ஆண்டு 86 வீதத்துடன் சுட்டெண்ணில் இலங்கை ஆறாவது இடத்தில் இருந்த நிலையில் இம்முறை இலங்கை ஒரு இடத்துக்கு கீழே வர முடிந்துள்ளது.

உலக வங்கியின் சமீபத்திய உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்தக் குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, உலக வங்கிக் குறியீட்டின்படி, உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடாக சிம்பாப்வே முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதன் உணவுப் பணவீக்கம் 321 சதவீதமாக உள்ளது.

லெபனான் மற்றும் வெனிசுலா நாடுகள் அந்த குறியீட்டில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன . இந்த நாடுகளின் உணவு பணவீக்கம் முறையே 203 மற்றும் 158 சதவீதமாக உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles