Saturday, September 20, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநெய்யில் கலப்படம்: பரிசோதனை செய்ய தீர்மானம்

நெய்யில் கலப்படம்: பரிசோதனை செய்ய தீர்மானம்

நெய்யுடன் பல வகையான எண்ணெய்கள் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.

சோதனை நடவடிக்கையின் போது, நெய்யில் மரக்கறி எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு பரிசோதனைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மலையகப் பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில் இவ்வாறான விற்பனைகள் இடம்பெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதனடிப்படையில், துறைமுகத்திலிருந்து விநியோகிக்கப்படும் நெய்யை பரிசோதனை செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles