Sunday, September 21, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசவுக்கு சுறா மீன் பாகங்களுடன் இருவர் கைது

சவுக்கு சுறா மீன் பாகங்களுடன் இருவர் கைது

தடைசெய்யப்பட்ட மீன் இனமான சவுக்கு சுறாக்கள் இரண்டை கொன்று பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்த மீனவர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பேருவளை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலக்பிரியா 18 என்ற கப்பலில் இருந்து 40 கிலோ எடையுள்ள சவுக்கு சுறா மீன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் இருவரும் மீன் பாகங்களுடன் பேருவளை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles