கல்கமுவ எஹெதுவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் 11 மாணவர்கள் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் வினாத்தாள்களுக்கு நேற்று விடையளிக்க முடியாமல் போனதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
11 மாணவர்களுக்கு ஒரு கண்காணிப்பாளரால் தவறான வினாத்தாள் வழங்கப்பட்டதாகவும், 30 நிமிடங்களுக்குப் பின்னர், கண்காணிப்பாளர் சரியான தாளைக் கொடுத்ததாக தெரிய வந்துள்ளது.
இதனால் ஏனைய மானவர்களுடன் ஒப்பிடுகையில், வினாத்தாள்களுக்கு விடையளிக்க தங்களின் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட 30 நிமிட நேரத்தை இழக்க நேரிட்டதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பரீட்சை ஆணையர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.