Monday, July 14, 2025
27.8 C
Colombo
செய்திகள்உலகம்தாய்லாந்து கப்பல் விபத்துக்குள்ளானதில் 33 பேர் மாயம்

தாய்லாந்து கப்பல் விபத்துக்குள்ளானதில் 33 பேர் மாயம்

தாய்லாந்து ரோயல் கடற்படைக்கு சொந்தமான கப்பல் விபத்துக்குள்ளானதில் 33 பேர் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.

மோசமான வானிலை காரணமாக HTMS Sukhothai கப்பல் இந்த விபத்தை சந்தித்துள்ளது.

விபத்தின் போது படகில் 106 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடலில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று பேர் மீட்கப்பட்டதுடன், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

பலத்த காற்று மற்றும் பலத்த மழையில் சிக்கியதால் கப்பலின் இயந்திர அமைப்பு செயலிழந்ததாக கூறப்படுகிறது.

960 டன் எடையுள்ள சுகோதை 1987 ஆம் ஆண்டு தாய்லாந்து கடற்படையில் இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

#Reuters

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles