நேற்று இரவு கெண்டி ஃபோல்கன்ஸுக்கு எதிரான போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது தசுன் ஷானக்க உபாதைக்கு உள்ளானார்.
அவரது, வலது கை நடுவிரலில் உபாதை ஏற்பட்டுள்ளது. அதனால் எக்ஸ்-ரே பரிசோதனைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆரம்ப பரிசோதனைகளுக்கமைய, பாரிய காயம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டது.
இதனையடுத்து, களத்திற்குத் திரும்பிய தசுன் ஷானக்க இலக்கைத் துரத்துவதற்கான முயற்சியில் துடுப்பாட்டம் செய்ய ஆர்வமாக இருந்தார்.
இருப்பினும் அவரது அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இது அவரது பழைய எலும்பு முறிவில் ஏற்பட்ட உபாதையாகும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர் மீண்டும் தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மயக்க மருந்து உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் தரப்புகள் தெரிவிக்கின்றன.