Saturday, November 16, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுழந்தையை உறங்க வைக்க 119க்கு அழைத்த பெண்

குழந்தையை உறங்க வைக்க 119க்கு அழைத்த பெண்

மூன்றாம் ஆண்டு படிக்கும் தனது குழந்தை தனக்கும் தனது குடும்பத்துக்கும் தொல்லை கொடுப்பதாக தாய் ஒருவர் பொலிஸ் அவசர பிரிவில் முறைப்பாடு செய்த சம்பவம் தம்புள்ளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், தம்புள்ளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இருவர், பதினைந்து கிலோமீற்றருக்கும் அப்பால் இருக்கும் குறித்த வீட்டிற்கு நள்ளிரவில் சென்றுள்ளனர்.

பொலிசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஹோர்ன் அடித்ததையடுத்து, சில நிமிடங்களுக்குபின்னர் ​​ஒரு பெண் கதவை திறந்து வெளியே வந்துள்ளார். குறித்த பெண்ணிடம் புகார் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் வினவினர்.

நீங்கள் தாமதமாக வந்து விட்டீர்கள். குழந்தை தற்போது நன்றாக உறங்குகிறது. நான் 7 மணிக்கு அழைப்பை ஏற்படுத்தினேன். நீங்கள் வந்ததோ 9 மணிக்கு என அப்பெண் பதில் அளித்துள்ளார்.

இந்த விசித்திரமான முறைப்பாடு குறித்து தாயாரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரித்தனர்.

தனது குழந்தை மூன்றாம் ஆண்டு படித்து வருவதாகவும், இரவு சீக்கிரம் தூங்கச் செல்லுமாறு கூறியும், தூங்காமல் பல்வேறு செயல்களில் ஈடுபடுவதாகவும், சகோதரர்களையும் தூங்க விடாமல் குழப்படி செய்வதாகவும், குழந்தையை பயமுறுத்துவதற்காக பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் அப்பெண் பதிலளித்துள்ளார்.

குழந்தைக்கு இரவு எத்தனை மணிக்கு தூங்க வேண்டும் என்று பொலிஸார் கேட்டபோது, மாலை சுமார் 6:30 மணிக்கு குழந்தைகள் தூங்க வேண்டும் என தாய் கூறியுள்ளார்.

இவ்வாறான சிறு சிறு சம்பவங்கலால் பொலிஸாரின் நேரமும் பொதுமக்களின் பணமும் வீண் விரயமாகிறது என தாயாரை கடுமையாக எச்சரித்த பொலிஸார், இனிமேல் இவ்வாறான செயல்களைச் செய்ய வேண்டாம் என எச்சரித்து விட்டுச் சென்றுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles